மத்திய ஆசியாவின் சிறந்த வணிகப் பள்ளி ஐ.ஐ.எம்., பெங்களூர்!
மத்திய ஆசியாவின் சிறந்த வணிகப் பள்ளி ஐ.ஐ.எம்., பெங்களூர்!
UPDATED : நவ 10, 2014 12:00 AM
ADDED : நவ 10, 2014 03:11 PM
பெங்களூர்: மத்திய ஆசியாவிலேயே சிறந்த முதல்தர வணிகப் பள்ளியாக ஐ.ஐ.எம்., பெங்களூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அக்கல்வி நிறுவனம், தனது முந்தைய நிலையை தக்க வைத்துக்கொண்டுள்ளது.
ஏழாவது ஆண்டாக இந்த சிறப்பை பெற்றுள்ளது ஐ.ஐ.எம்., பெங்களூர். Eduniversal Business School Ratings and Rankings 2014 -ன் படி, இந்த பெருமையைப் பெற்றுள்ளது ஐ.ஐ.எம்., பெங்களூர்.
மொத்தம் 60 நாடுகளைச் சேர்ந்த, 120 மேலாண்மை கல்வி நிறுவனங்களுக்கு மத்தியில், ஐ.ஐ.எம்., பெங்களூர், சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது இங்கே கவனிக்கத்தக்கதாகும்.
மேலும், திறந்தநிலை எக்சிகியூடிவ் படிப்புகளை வழங்கும் 70 சிறந்த கல்வி நிறுவனங்களின் வரிசையிலும், ஐ.ஐ.எம்., பெங்களூர், 53வது இடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த சர்வே, வேறொரு நிறுவனத்தால் எடுக்கப்பட்டதாகும்.

