அரசு மருத்துவக் கல்லுாரியில் பட்டய படிப்பு மாணவர் சேர்க்கை
அரசு மருத்துவக் கல்லுாரியில் பட்டய படிப்பு மாணவர் சேர்க்கை
UPDATED : ஜன 11, 2024 12:00 AM
ADDED : ஜன 11, 2024 09:40 AM
விக்கிரவாண்டி:
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் மாணவர்களுக்கு பட்டயப் படிப்பு சேர்க்கைகான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரியில் 2023-2024ம் ஆண்டிற்கான ஆய்வு கூட நுட்புனர் பட்டயப் படிப்பு மாணவர் சேரக்கைக்கு ஆன்லைன் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இந்தாண்டு இந்த படிப்பில் 140 மாணவ, மாணவியர்கள் ஆன்லைனில் சேர்க்கைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சேர்க்கை ஆணையை கல்லுாரி துணை முதல்வர் சங்கீதா வழங்கினார்.மருத்துவக் கல்லுாரியில் இந்தாண்டு முதல் மன நல ஆதரவு பணியாளர் பயிற்சி துவங்குவதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி 12ம் வகுப்பு படித்தவர்கள் இப்பயிற்சியில் சேரலாம். விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.கல்லுாரி நிர்வாக அலுவலர் சிங்காரம், இளநிலை நிர்வாக அலுவலர் ஸ்ரீவத்சன் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் பங்கேற்றனர்.