அங்கன்வாடி குழந்தைகள் தாகத்தை தணிக்க கிணறு தோண்டும் பெண்
அங்கன்வாடி குழந்தைகள் தாகத்தை தணிக்க கிணறு தோண்டும் பெண்
UPDATED : பிப் 09, 2024 12:00 AM
ADDED : பிப் 10, 2024 08:39 AM
உத்தர கன்னடா:
அங்கன்வாடி குழந்தைகளின் தாகத்தைத் தீர்க்க, 55 வயது பெண் கிணறு தோண்டும் பணியை ஈடுபட்டு உள்ளார்.உத்தர கன்னடா மாவட்டம், சிர்சியின் கணேஷ் நகரில் அங்கனாடி மையம் உள்ளது. இங்கு, 15 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். ஹட்காரா கிராம பஞ்சாயத்து சார்பில் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் குடிப்பதற்கு, வெளியில் இருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டி உள்ளது.இதை பார்த்த இப்பகுதியை சேர்ந்த கவுரி நாயகா, 55, குழந்தைகள் நலனுக்காக, கிணறு தோண்டும் பணியைத் துவக்கி உள்ளார். அங்கன்வாடி மையத்தின் வளாகத்தில், 4 நான்கு அடி விட்டத்தில், தினமும் மண்வெட்டி, கூடை, கயிறு உதவியுடன் ஒன்றரை அடி ஆழம் தோண்டி வருகிறார். ஒரு மாதத்திற்குள் கிணறு தோண்டி முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளார்.இவரின் செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு மட்டும் தெரிவித்து வருகின்றனர். யாரும் இதுவரை உதவ முன்வரவில்லை.