UPDATED : மார் 14, 2024 12:00 AM
ADDED : மார் 14, 2024 08:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தட்சிண கன்னடா:
கல்லுாரி மாணவியர் மீது ஆசிட் வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.உத்தர கன்னடா மாவட்டம், கடபாவில், கடந்த 5ம் தேதி பி.யு.சி., தேர்வுக்கு வந்திருந்த மூன்று மாணவியர் மீது, கேரள மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.ஏ., மாணவர் அபின் ஆசிட் வீசினார். இதில் படுகாயமடைந்த மூவரும், மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அபினை மடக்கி பிடித்த சக மாணவர்கள், போலீசில் ஒப்படைத்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், இவருக்கு கல்லுாரி சீருடை தைத்த நபர், ஆன்லைனில் ஆசிட் வாங்கிக் கொடுத்தவர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் நேற்று தட்சிண கன்னடாவுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களின் விபரத்தை போலீசார் வெளியிடவில்லை.

