மூன்று அரசு பள்ளி மாணவர்கள் ஏற்காட்டிற்கு கல்வி சுற்றுலா
மூன்று அரசு பள்ளி மாணவர்கள் ஏற்காட்டிற்கு கல்வி சுற்றுலா
UPDATED : மார் 15, 2024 12:00 AM
ADDED : மார் 15, 2024 09:16 AM
புதுச்சேரி:
புதுச்சேரி தேத்தாம்பாக்கம், வம்புப்பட்டு, குமராபாளையம் ஆகிய மூன்று அரசு துவக்கப் பள்ளிகளை சேர்ந்த 60 மாணவர்கள் ஏற்காடு பகுதிக்கு கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.பள்ளிகளின் பொறுப்பாசிரியர்கள் குமரன், கந்தவேல், பாலசுந்தரம் ஆகியோரின் ஏற்பாட்டில் 60 மாணவர்கள் ஏற்காட்டில் அமைந்துள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டுகளித்தனர்.ஏற்காடு ஆரோ பார்க் உரிமையாளர் பிரபாகரன்-பஞ்சமலர் ஆகியோர் இலவசமாக ஆரோ பார்க் பகுதியையும், அங்குள்ள விமானத்திலும் அமர்ந்து கண்டுகளிக்கவும் அனுமதித்து, ஆரோ பார்க் சுற்றுலா தளத்தை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து புதுச்சேரி திரும்பினர்.மாணவர்கள் பாதுகாப்பான முறையில் சுற்றுலா அழைத்துச் செல்ல ஆசிரியர்கள் முத்துக்குமரன், கருணாகரன், பாலாஜி, திருமதி, அருள்ஜோதி, உமா, தமிழ்ச்செல்வி, சுஜிதா, மேரிபிரின்சி, யுவரஞ்சனி, கவிதாமணி ஆகியோர் சென்றுவந்தனர்.

