வெளிநாடு செல்வோர் பயிற்சி மையம் கலெக்டர் துவக்கி வைப்பு
வெளிநாடு செல்வோர் பயிற்சி மையம் கலெக்டர் துவக்கி வைப்பு
UPDATED : மார் 19, 2024 12:00 AM
ADDED : மார் 19, 2024 09:27 AM
சிவகங்கை:
சிவகங்கையில் அயலகதமிழர் நலம் மற்றும் மறுவாழ்வு துறை சார்பில் வெளிநாடு செல்வோருக்கான முன் பயண பயிற்சி மைய திறப்பு விழா நடந்தது.கலெக்டர் ஆஷா அஜித் மையத்தை திறந்து வைத்தார். வெளிநாடுகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்காக செல்லும் தமிழர்கள் கலெக்டர் அலுவலக முன்பயண புத்தாக்க பயிற்சி பெறலாம்.இதில் கட்டட தொழிலாளர், டிரைவர், எலக்ட்ரீசியன், வீட்டு வேலை செய்வோர் ஆகியோருக்கு கல்வி தகுதி, ஆவணம் தொடர்பான தெளிவு அளிக்கப்படும். ஆங்கிலம்மற்றும் அரபு மொழி தொடர்பான அடிப்படை பயிற்சி வழங்கப்படும். பயிற்சியில் வீட்டு உபயோக பொருள் கையாளுதல் பயிற்சி போன்று திறன் பயிற்சி அளிக்கப்படும்.மத்திய அரசில் பதிவு செய்த வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்புவோர், புதிதாக வேலைக்கு செல்ல விரும்புவோர் இம்மையத்தில் பதிவு செய்யலாம். இங்கு பதிவு செய்ய பாஸ்போர்ட், ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையுடன்வரவேண்டும். இதற்கானபயிற்சி கையேடும் வழங்கப்படும்.மேலும் விபரங்களுக்கு 98948 31628ல் தொடர்பு கொள்ளலாம். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், கலெக்டர் பி.ஏ.,(பொது) முத்துக்கழுவன், சிவகங்கை பல்நோக்கு சமூக சேவா சங்க செயலாளர் பிரிட்டோ ஜெயபாலன் பங்கேற்றனர்.