தாமரை பிரதர்ஸ் பதிப்பக நுாலுக்கு தமிழ் சங்கம் விருது
தாமரை பிரதர்ஸ் பதிப்பக நுாலுக்கு தமிழ் சங்கம் விருது
UPDATED : ஏப் 26, 2024 12:00 AM
ADDED : ஏப் 26, 2024 05:16 PM

ஏப்ரல்:
புதுக்கோட்டை தமிழ் சங்கத்தின் உலக அளவிலான, அறமனச் செம்மல் சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள் - 2024ல் ஜி.வி.ரமேஷ்குமார் எழுதி, தாமரை பிரதர்ஸ் மீடியா (பி) லிட் வெளியிட்ட, ஆட்சித்தலைவிகள் நுால், தன்னம்பிக்கை பிரிவில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளாவில் பணிபுரியும், ஏற்கனவே பணியாற்றிய 15 பெண் கலெக்டர்கள் ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதித்தது எப்படி என, அவர்களின் தன்னம்பிக்கை கதை பற்றிய நுால், ஆட்சித்தலைவிகள்!
ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதுபவர்களுக்கான வழிகாட்டியாகவும் அமைந்துள்ள இந்நுாலுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட பிற நுால்கள்:
நாவல்: குளம்படி - வெற்றிச்செல்வன் ராசேந்திரன், மரபுக்கவிதை - வேலுநாச்சியார் காவியம் புதுகை வெற்றிவேலன், ஹைக்கூ: பொட்டலம் - கவிஞர் நயினார், கட்டுரை: தண்டனைக் களமாகும் பெண்ணுடல் - சுகிதா சாரங்கராஜ், சிறுகதை: கரியோடன் - சாரோன், புதுக்கவிதை: என் பெயரெழுதிய அரிசி - கண்மணி ராசா.
சிறுவர் இலக்கியம்: பாப்பாவுக்கு பறவைப்பாட்டு - சாந்தி சந்திரசேகர், கட்டுரை: மறுவாசிப்பில் தமிழ் நாவல்கள் - ந. முருகேசபாண்டியன், சிற்றிதழ்: புன்னகை - க.அம்சப்பிரியா, ச.ரமேஷ்குமார்.
புதுக்கோட்டையில் விருதுகள் பட்டியலை, அருண் சின்னப்பா வெளியிட, கவிஞர் நா. முத்துநிலவன் பெற்றுக் கொண்டார். புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி, செயலர் கவிஞர் மகா சுந்தர் பங்கேற்றனர். வரும் 30ல் புதுக்கோட்டையில் நடக்கும் விழாவில் பட்டிமன்ற நடுவர், எழுத்தாளர் கு.ஞானசம்பந்தன் விருதுகளை வழங்குகிறார்.