போர்ப்ஸ் இதழின் இளம் சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்தியர்கள்
போர்ப்ஸ் இதழின் இளம் சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்தியர்கள்
UPDATED : மே 18, 2024 12:00 AM
ADDED : மே 18, 2024 05:43 PM

புதுடில்லி:
ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், நிதி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்த 30 வயதுக்கு கீழ் உள்ள 30 சாதனையாளர்கள் குறித்து போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட பட்டியலில் இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அவர்களின் புதிய கண்டுபிடிப்புகள், ஏற்படுத்திய மாற்றங்கள் ஆகியவற்றுக்காக சாதனையாளர்கள் பட்டியலில் இவர்கள் இடம்பிடித்துள்ளனர்.
அவர்களின் பட்டியல்
பொழுதுபோக்கு
பாடல் ஆசிரியர், பாடகி பவித்ரா சாரி , ராப் பாடகர் அர்பன் குமார் சாந்தல்
நுகர்வோர் தொழில்நுட்பம்
பார்வை குறைபாடு உடையவர்கள் பயன்படுத்தும் வகையில் புதிய கண்டுபிடிப்புக்காக குஷ் ஜெயின், இந்திய டுரோன் ஸ்டார்ட் அப் ஐ சேர்ந்த ஆர்த் சவுத்ரி, தேவ்யந்த் பரத்வாஜ், ஒஷி குமாரி, டிரைவிங் ஸ்டார்ட் அப் நிறுவனமான பிளக்ஸ் ஆட்டோவின் பிரணவ் மன்புரியா, ஆட்ரோ ரிக்ஷாக்களில் மாற்றக்கூடிய பேட்டரிகளை உருவாக்கிய ரேஸ் எனர்ஜி ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அருண் ஸ்ரேயாஸ், கவுதம் மகேஸ்வரன் , கிளவுட் கேமிங் ஸ்டார்ட் அப்-ஐச் சேர்ந்த ஹர்ஷித் ஜெயின் மற்றும் அபிக் சாஹா,
எண்டர்பிரைஸ் தொழில்நுட்பம்
குணால் அகர்வால், கவுரவ் பியூஷ், மயங்க் வர்ஷ்னே, யஷ் சர்மா, ஆதித்யா தாடியா
நிதித்துறை
ஆலேஷ் அவ்லானி, ஸ்ரீனிவாஸ் சர்கார், குஷக்ரா மங்கலிக், அனிகேட் தாம்லே, யஷ்வர்தன் கனோய், மணிஷ் மர்யதா, அனுஜ் ஸ்ரீவஸ்தவா, பிரியேஷ் ஸ்ரீவஸ்தவா
சுகாதாரம் மற்றும் அறிவியல்
கரன் அஹூஜா ,ஆர்யன் சவுகான், தொழில்துறை, உற்பத்தி,அக்ஷித் பன்சால், ராகவ் அரோரா, அங்கித் ஜெயின், நாராயன் லால் குர்ஜார், சிராக் ஜெயின் மற்றும் ராமா கிருஷ்ணா மெண்டு, ராஹில் குப்தா
மீடியா, மார்க்கெட்டிங்
கவன் அண்டனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.