ஆசிரியர்களுக்கு மே மாத விடுப்பை உறுதி செய்ய எதிர்பார்ப்பு
ஆசிரியர்களுக்கு மே மாத விடுப்பை உறுதி செய்ய எதிர்பார்ப்பு
UPDATED : மே 26, 2024 12:00 AM
ADDED : மே 26, 2024 11:04 AM
விருதுநகர்:
மே மாதத்தில் தொடர்ந்து பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மே மாத விடுப்பை உறுதி செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆசிரியர்கள் கூறியதாவது:
இந்தாண்டு மே 4 ல் பிளஸ் 1 விடைத்தாள் மதிப்பீடு, மே 6 ல் பிளஸ் 2 விற்கும், மே 14 ல் பிளஸ் 1 வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், பிளஸ் 1 வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை என முதுகலை ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு நலத்திட்ட உதவிகள் பெற்றோருக்கு செல்வதை ஆராய ஆன்லைன் ஒ.டி.பி., பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய உத்தரவு வந்துள்ளது. இது போன்ற தொடர் பணிகளால் மே மாதம் முழுவதும் ஆசிரியர்கள் மன உளைச்சலோடு பணியாற்றி வருகின்றனர்.
எனவே மே மாத விடுப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும் தொடர்ந்து பணியாற்ற நிர்பந்திக்கும் நிலையில் தற்போது வழங்கப்படும் 17 நாள்கள் ஈட்டிய விடுப்பினை, மற்ற அரசு துறைப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதை போல 30 நாள்களாக உயர்த்தி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.