பயிர் மாதிரிகள் வாயிலாக மகசூல்; பல்கலையில் நடைமுறை பயிற்சி
பயிர் மாதிரிகள் வாயிலாக மகசூல்; பல்கலையில் நடைமுறை பயிற்சி
UPDATED : ஜூன் 14, 2024 12:00 AM
ADDED : ஜூன் 14, 2024 08:02 AM

கோவை :
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்திலுள்ள நீர் மற்றும் புவிசார் ஆராய்ச்சி மையத்தில், பயிர் காப்பீட்டில் தொலையுணர்வு மற்றும் பயிர் மாதிரிகள் வாயிலாக, மகசூல் கண்டறிதல் பயிற்சி நடந்தது.
டில்லி, மகாலானோபிஸ் தேசிய பயிர் முன்னறிவிப்பு மையம், வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சக நிதி உதவியுடன் நடந்த நிகழ்ச்சியில், புவிசார் மற்றும் நீர் நுட்ப மைய இயக்குனர் பழனிவேலன் வரவேற்றார். வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, பயிர் காப்பீட்டின் முக்கியத்துவம், இதில் வேளாண் பல்கலைக் கழகத்தின் பங்களிப்பு குறித்து பேசினார்.
தேசிய பயிர் முன்னறிவிப்பு மைய இயக்குனர் மூர்த்தி, துணை இயக்குனர் சுனில் குமார் துபே ஆகியோர், பயிர் காப்பீட்டின் தொழில்நுட்பம் வாயிலாக, பயிர் மகசூல் கணக்கிடும் முறை, முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, பயிர் மகசூலை துல்லியமாக மற்றும் குறித்த நேரத்தில் கண்காணிப்பது, பயிற்சியின் முக்கிய நோக்கம். இதை திறம்பட செயல்படுத்தினால், பயிர் இழப்பை சரியாக அளவிட்டு, பயிர் இழப்பிற்கு ஏற்றவாறு, பயிர் காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு வழங்க முடியும். எனவே, வேளாண்மை, புள்ளியில் மற்றும் பயிர் காப்பீட்டு துறையை சார்ந்த அலுவலர்களுக்கு, தொழில்நுட்பம் மற்றும் நடைமுறை பயிற்சி வழங்கப்பட்டது.
மூன்று நாட்கள் நடந்த பயிற்சியில், பல்வேறு மாநிலங்களில் இருந்து, 80 வேளாண் இயக்குனர்கள், வேளாண் துணை இயக்குனர்கள், அலுவலர்கள், காப்பீட்டு மேலாளர்கள், வேளாண் அமைச்சக அலுவலர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.

