ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தொடர்ந்து படிக்க அனுமதி!
ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தொடர்ந்து படிக்க அனுமதி!
UPDATED : ஜூன் 14, 2024 12:00 AM
ADDED : ஜூன் 14, 2024 08:03 AM

கோவை:
பள்ளியில் இருந்து டிசி கொடுத்து அனுப்பப்படவிருந்த 15 மாணவர்களை, தொடர்ந்து அதே பள்ளியில் படிக்க பள்ளி நிர்வாகம் அனுமதித்துள்ளது.
கோவை சூலுார், வட்டம் சுல்தான்பேட்டை சின்ன வதம்பச்சேரியில் உள்ள, சொக்கர் செட்டியார் மல்லம்மாள் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள், 15 பேருக்கு டி.சி., கொடுத்து பள்ளியை விட்டு அனுப்புவதாக தகவல் வெளிவந்தது.
இந்த மாணவர்கள் அங்கு 10ம் வகுப்பில் தொடர்ந்து படித்தால், 100 சதவீதம் தேர்ச்சி வராது என்பதை கருத்தில் கொண்ட பள்ளி நிர்வாகம், மாணவர்களை வெளியே அனுப்ப முடிவு செய்வதாக, மாணவர்களின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்த செய்தி, நமது நாளிதழில் வெளியானது. இதையடுத்து பள்ளி நிர்வாகம், அந்த 15 மாணவர்களையும் தொடர்ந்து படிக்க அனுமதித்துள்ளது.
மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், சரியாக படிக்காத ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு டி.சி., கொடுத்து வெளியே அனுப்புவது, கோவையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பல பள்ளிகளில் நடக்கிறது. இதை மாவட்ட கல்வி அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதில்லை. இது குறித்து, அரசு முறையான அறிவிப்பை வெளியிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

