sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு மூடுவிழா

இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு மூடுவிழா

இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு மூடுவிழா


UPDATED : ஜூன் 14, 2024 12:00 AM

ADDED : ஜூன் 14, 2024 08:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2024 12:00 AM ADDED : ஜூன் 14, 2024 08:05 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்:
கொரோனா கால கட்டத்தில் மாணவர் கல்வித்தரம் மேம்படுத்தவும், கற்றல் இடைவெளியை குறைக்கவும், இல்லம் தேடி கல்வி திட்டம், 2021ல் துவங்கப்பட்டது.

தமிழ், ஆங்கிலம், கணிதம் கற்றுத்தருவதுடன் ஆடல், பாடல், நாடகம், என களை கட்டியதால், பெற்றோர், குழந்தை மத்தியில் இம்மையங்கள் வரவேற்பை பெற்றன.மாநிலம் முழுதும், 2.10 லட்சம் தன்னார்வலர்கள் வகுப்புகளை நடத்தினர். இந்தக் கல்வியாண்டு துவங்கி ஒரு வாரம் நிறைவு பெற உள்ள நிலையில், இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகளை துவங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.

கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:

கொரோனா கால கட்டம் முடிந்து விட்டது; தன்னார்வலர்களில் சிலர் ஆக்கபூர்வமாக பணியாற்றினாலும், ஒரு சிலர் வகுப்புகள் நடத்தாமல், ஏற்கனவே எடுத்து வைத்த போட்டோக்களையே பதிவேற்றம் செய்கின்றனர். இதுவரை திறம்பட பணியாற்றியவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் மாற்றுப்பணி வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us