UPDATED : ஆக 24, 2024 12:00 AM
ADDED : ஆக 24, 2024 10:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கே.கே.பட்டியில் தனியார் உயர் நிலைப்பள்ளி உள்ளது. வழக்கம் போல நேற்று பள்ளி முடிந்து மாலையில், 35 மாணவர்களுடன் புதுவிடுதியை நோக்கி பள்ளி வேன் சென்றது.
காடம்பட்டி அருகே சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் காயமின்றி தப்பினர். ஒரு மாணவர் காயமடைந்த நிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவிக்கு பின் வீடு திரும்பினார்.