sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தென் மாநில இளைஞர்களை சைபர் குற்றவாளிகளாக்கும் சீன கும்பல்

/

தென் மாநில இளைஞர்களை சைபர் குற்றவாளிகளாக்கும் சீன கும்பல்

தென் மாநில இளைஞர்களை சைபர் குற்றவாளிகளாக்கும் சீன கும்பல்

தென் மாநில இளைஞர்களை சைபர் குற்றவாளிகளாக்கும் சீன கும்பல்


UPDATED : செப் 18, 2024 12:00 AM

ADDED : செப் 18, 2024 10:03 PM

Google News

UPDATED : செப் 18, 2024 12:00 AM ADDED : செப் 18, 2024 10:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
தென் மாநில இளைஞர்களை, சைபர் குற்றவாளிகளாக மாற்ற, சீன மோசடி கும்பல்கள் வலை விரிப்பதாக, கைதான வாலிபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூருவில், ஆன்லைன் வாயிலாக பண மோசடி செய்யும், சைபர் குற்றவாளிகள் சசிகுமார், சச்சின், கிரண், சரண்ராஜ் ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில், சி.பி.ஐ., அதிகாரிகள் போல நடித்து, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்த தொழில் வர்த்தகரிடம், 2.16 கோடி ரூபாயை பெற்று, திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த தமிழரசன், 29, அஜித், 28, பிரகாஷ், 26, அரவிந்தன், 23, ஆகியோரின் வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்தது தெரியவந்தது.

இந்த நான்கு பேரையும், சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில், அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்து, நான்கு நாட்கள் காவலில் எடுத்தும் விசாரித்துள்ளனர்.

தமிழரசன் அளித்துள்ள வாக்குமூலம்:

நாங்கள் நால்வரும் நண்பர்கள். ஆறு மாதம் முன், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தோம். வீடியோ அழைப்பில் அந்தரங்க விஷயங்கள் பேசும், செயலி ஒன்றை பயன்படுத்தி வந்தோம்.

அதன் வாயிலாக, பெங்களூருவைச் சேர்ந்த சரண்ராஜ் உள்ளிட்ட, நான்கு பேரின் அறிமுகம் கிடைத்தது. இவர்கள் தான், எங்களுக்கு சீனாவைச் சேர்ந்த மோசடி கும்பலின் தொடர்பை ஏற்படுத்தினர். இந்த கும்பல் எங்களை சி.பி.ஐ., அதிகாரிகள் போல நடித்து, பணம் பறிப்பது குறித்து பயிற்சியும் அளித்தது.

சரண்ராஜ் உள்ளிட்ட நால்வரும், எங்கள் கிராமத்திற்கு வந்து மோசடியில் ஈடுபடுவது குறித்து நேரடியாக சொல்லி கொடுத்தனர்.

இவர்களிடம், தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான நபர்களின் மொபைல் போன் எண்கள் இருந்தன. அவற்றை எங்களிடம் கொடுத்து, சி.பி.ஐ., அதிகாரிகள் போல நடித்து பணம் பறிக்க உத்தரவிட்டனர். இதற்கு லட்சக்கணக்கில் கமிஷன் தருவதாகவும் கூறினர்.

இதனால், வேலையை உதறிவிட்டு மோசடி தொழிலில் முழு நேரமாக ஈடுபட்டு வந்தோம். சீன மோசடி கும்பல், சமூக வலைதளத்தில் அதிக நேரம் செலவிடும், தமிழகம், கேரளா, கர்நாடகா என, தென் மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களை குறி வைத்து, சைபர் குற்றவாளிகளாக மாற்றி வருகிறது.

இக்கும்பல்கள் மோசடி பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றி விடுகின்றனர். இவர்களுடன் சேர்ந்து, 28 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளோம். சொந்த நாட்டில் இருந்தபடியே சீன மோசடி கும்பல்கள் என்னை போன்ற நபர்களை இயக்கி வருகிறது.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us