UPDATED : நவ 02, 2024 12:00 AM
ADDED : நவ 02, 2024 11:58 AM

பாலக்காடு:
பாலக்காடு அருகேயுள்ள, சித்தூர் அரசு கல்லூரிக்கு நாக் ஏ பிளஸ் அந்தஸ்து கிடைத்து உள்ளது.
பாலக்காடு, சித்துார் அரசு கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் ரெஜி கூறியதாவது:
மாநிலத்தில் உள்ள, 60க்கும் மேற்பட்ட அரசு கல்லூரிகளில், சித்தூர் அரசு கல்லூரி உட்பட ஏழு கல்லூரிகளுக்கு மட்டுமே சிறப்பு அந்தஸ்து உள்ளன. இதில், நாக் ஏ கிரேடு அரிதானது. இந்த அந்தஸ்து கிடைத்ததால், மாநிலத்தின் மூன்றாவது கல்லூரி என்ற பெருமையை சித்தூர் கல்லுாரி பெற்றுள்ளது.
அடிப்படை வசதிகள், கல்வித் திறன், ஆராய்ச்சி, சமூகப் பணி மற்றும் கலை மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்குதல் போன்ற பல்வேறு விஷயங்களை மதிப்பிட்டு இந்த கிரேடு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிக மாணவர்களை உயர்கல்விக்கு வழிநடத்தவும், மத்திய அரசின் நிதியை பெற்று கல்லூரியை மேலும் மேம்படுத்தவும் இந்த அந்தஸ்து உதவும். 76 ஆண்டுகள் பழமையான கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் உள்ளன. இக்கல்லூரி கணிதம், புவியியல், பொருளாதாரம், இசை மற்றும் தமிழ் ஆகிய துறைகளுக்கான ஆராய்ச்சி மையமாகவும் செயல்படுகிறது. கணினி மயமாக்கப்பட்ட நூலகத்தில், 1.035 லட்சம் புத்தகங்கள், 20 பருவ இதழ்கள் மற்றும் பல மின் இதழ்கள் உள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.