சான்றிதழை சரிபார்த்த பின் கலந்தாய்வு நடத்த கோரிக்கை
சான்றிதழை சரிபார்த்த பின் கலந்தாய்வு நடத்த கோரிக்கை
UPDATED : நவ 06, 2024 12:00 AM
ADDED : நவ 06, 2024 09:18 AM
புதுச்சேரி :
என்.ஆர்.ஐ., மாணவர்கள் சான்றிதழ்களை சரிபார்த்த பின் இறுதிகட்ட கலந்தாய்வு நடத்த வேண்டும் என முதல்வருக்கு, மாணவர் பெற்றோர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, மாணவர் பெற்றோர் நலச் சங்க தலைவர் நாராயணசாமி முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
சென்டாக் மாணவர் மருத்துவ சேர்க்கையில், போலி சான்றிதழ்கள் கொடுத்து, மருத்துவ இடங்களை வெளி மாநிலத்தினர் வாங்குவதாக புகார் அளித்துள்ளோம். அதன்படி, அந்த மாணவர்கள் கண்டறியப்பட்டு, நீக்கப்பட்டுள்ளனர்.
அதே போல, என்.ஆர்.ஐ., இடங்களிலும், மாணவர்களின் சான்றிதழ்களை சோதனை செய்ய வேண்டும்.போலி சான்றிதழ்கள் கொடுத்தால், மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்என, எச்சரிக்கை செய்ய வேண்டும்.
இதுவரை கலந்தாய்வில், இடம் பெற்ற மாணவர்கள் அனைவரின் சான்றிதழ்களையும் சரிபார்த்த பின், இறுதிகட்ட கலந்தாய்வை நடத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.