UPDATED : நவ 07, 2024 12:00 AM
ADDED : நவ 07, 2024 10:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தர்மபுரி மாவட்டம், ராமியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் பாலாஜி, தனக்குப் பதில் வேறொருவரை நியமித்ததால், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம் ராமியம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் கடந்த ஆக., 2ல் நடந்தது. அப்போது, அரூர் மாவட்ட கல்வி அதிகாரி சின்னமதுவிடம், பள்ளியின் ஆங்கில ஆசிரியர் பாலாஜி மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.
அதாவது, பாலாஜி பள்ளிக்கு வருவதில்லை. அவருக்குப் பதில் வேறொரு ஆசிரியரை நியமித்துள்ளார். இவ்வாறான முறைகேடுகளில் ஈடுபடும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.
இதையடுத்து, பாலஜியை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.