மருத்துவ கல்லுாரி மாணவன் விடுதியில் துாக்கிட்டு தற்கொலை
மருத்துவ கல்லுாரி மாணவன் விடுதியில் துாக்கிட்டு தற்கொலை
UPDATED : நவ 15, 2024 12:00 AM
ADDED : நவ 15, 2024 08:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போரூர்:
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் ரிஷிகேஷ், 18; சென்னை போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு மாணவர்.
நேற்று முன்தினம் இரவு, தங்கியிருந்த கல்லுாரி விடுதி அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
போரூர் போலீசார், உடலை மீட்டு விசாரித்ததில், குமாரபாளையத்தில் ஒரு பெண்ணை ரிஷிகேஷ் காதலித்து வந்ததும், சில நாட்களாக அப்பெண் அவரிடம் பேசாததால் மன உளைச்சலில் ரிஷிகேஷ் இருந்ததும் தெரியவந்தது.