UPDATED : டிச 12, 2024 12:00 AM
ADDED : டிச 12, 2024 09:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்துக்கு, துணைத்தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்களை, தமிழக அரசு நியமிக்க உள்ளது.
இவர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள். இப்பதவிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.விண்ணப்பிக்க வரும், 24ம் தேதி கடைசி நாள்.
விருப்பம் உள்ளவர்கள், செயலர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தலைமை செயலகம், சென்னை - 600 009 என்ற முகவரிக்கு, தங்களின் விபரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.