அமெரிக்க பல்கலையுடன் ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரி ஒப்பந்தம்
அமெரிக்க பல்கலையுடன் ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரி ஒப்பந்தம்
UPDATED : டிச 28, 2024 12:00 AM
ADDED : டிச 28, 2024 11:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
கிணத்துக்கடவு, ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி மற்றும் அமெரிக்காவின், சான் டியாகோ மாநில பல்கலை இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சான் டியாகோ மாநில பல்கலையின் சர்வதேச உறவுக்கான டீன் இயன் கிப்சன், துணை டீன் மஹாஸ்வேதா சர்க்கார் மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரி முதல்வர் சுதா ஆகியோர், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்திய மாணவர்கள் குறைந்த செலவில் சான் டியாகோ பல்கலையில் தங்களது மேற்படிப்பை மேற்கொள்ள முடியும் என்று, கல்லுாரியின் முதல்வர் தெரிவித்தார்.
கல்லுாரியின் சர்வதேச உறவு துறை டீன் கண்ணன் நரசிம்மன், துணை இயக்குனர் கார்த்திகேயன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.