தினமலர் நாளிதழ் சார்பில் பேச்சுப்போட்டி; பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு
தினமலர் நாளிதழ் சார்பில் பேச்சுப்போட்டி; பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு
UPDATED : டிச 30, 2024 12:00 AM
ADDED : டிச 30, 2024 11:50 AM

கோவை:
தினமலர் நாளிதழ், இந்திய நீர்ப்பணிகள் சங்கம், எய்ம் தன்னார்வு தொண்டு நிறுவனம் மற்றும் திருக்குறள் ஆய்வுக் கழகம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் பங்கேற்க, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடக்க உள்ளன. ஒரு பள்ளியில் இருந்து அதிகபட்சமாக ஆறு மாணவர்கள் மட்டுமே பங்கேற்கலாம். மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் நடக்க உள்ளதால், போட்டிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. போட்டிகள் ஜன.,4ம் தேதி காலை 9:30 மணிக்கு நடக்க உள்ளன.
மாணவர்கள், நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் என்னுடைய நவீன சிந்தனைகள் மற்றும் நீர் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மையில் நம்முடைய பங்கு ஆகிய இரு தலைப்புகளில், ஏதேனும் ஒரு தலைப்பில், மூன்று நிமிடங்கள் தமிழில் பேச வேண்டும்.
போட்டிகள், குனியமுத்துார் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி, ஈச்சனாரி, ரத்தினம் கல்லுாரி, பீளமேடு, பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி, பொள்ளாச்சி, பி.ஏ., கலை, அறிவியல் கல்லுாரியில் நடக்க உள்ளன. பங்கேற்க பதிவு கட்டணம் கிடையாது.
வரும், பிப்., 1ம் தேதி பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா குனியமுத்துார், ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினியரிங், தொழில்நுட்பக் கல்லுாரியில் நடக்க உள்ளது.
எட்டாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான பிரிவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக, ரூ.7,000, இரண்டாம் பரிசாக, ரூ.5,000, மூன்றாம் பரிசாக, ரூ.3,000 வழங்கப்படும்.
பிளஸ், 1 மற்றும் பிளஸ், 2 மாணவர்களுக்கான பிரிவில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக, 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக, ரூ.7,500, மூன்றாம் பரிசாக, ரூ.5,000 வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும், பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க, https://forms.gle/fVLeVjLgidXvMLc4A என்ற கூகுள் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
அல்லது கொடுக்கப்பட்ட க்யூஆர்., கோடை ஸ்கேன் செய்து, ஜன., 2ம் தேதி இரவு, 9:00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 94430 39839, 80725 62423 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.