அரசு கல்லுாரிகளில் இளநிலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
அரசு கல்லுாரிகளில் இளநிலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
UPDATED : மே 14, 2025 12:00 AM
ADDED : மே 14, 2025 08:30 AM
ஆண்டிபட்டி :
ஆண்டிபட்டி அரசு கலை,அறிவியல் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளில் படிக்க மாணவ, மாணவிகள் விண்ணப்பிலாம் என்று கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது:
ஆண்டிபட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2025- --2026ம் கல்வியாண்டில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் www.tngasa.in என்ற இணைய தளம் மூலம் இம்மாதம் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கல்லூரியில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இந்த மையத்தை அணுகி ஆலோசனை பெற்று பயன்பெறலாம் என்றார். வீரபாண்டி அரசு கல்லுாரியில் இளநிலை பாடப்பிரிவு களில் 2025-2026 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது.
பாடப்பிரிவுகள், சந்தேகங்களை கல்லுாரி பேராசிரியர் அன்புச்செல்வனை 97510 34133 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
விரும்பவர்கள் http://www.tngasa.in/user/register என்ற இணையதளத்தில் மே 27 க்குள் விண்ணப்பிக்கலாம் என கல்லுாரி முதல்வர் உமாதேவி தெரிவித்துள்ளார்.