UPDATED : மே 14, 2025 12:00 AM
ADDED : மே 14, 2025 08:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி :
முதல்வர் ரங்கசாமியை பல்கலைக் கழக துணைவேந்தர் சந்தித்து பேசினார்.
மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ், மாகியில் புதுவை பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரி நிரந்தர வளாகம் அமைப்பட உள்ளது. இதற்காக நிலம் ஒதுக்கீடு செய்யவும், மேலும் மற்றொரு பிராந்தியமான ஏனாமில் புதுச்சேரி பல்கலைக் கழக சமுதாயக் கல்லுாரியை நிறுவவும், புதுச்சேரி பல்கலைக் கழக துணை வேந்தர் பிரகாஷ் பாபு முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கேட்டுக்கொண்டார். சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், திருமுருகன், பல்கலைக்கழக (கல்வி) இயக்குனர் தரணிக்கரசு, கணேஷ் உடனிருந்தார்.