கல்லுாரி முதல்வர் பணியிடம் நிரப்ப அரசுக்கு வலியுறுத்தல்
கல்லுாரி முதல்வர் பணியிடம் நிரப்ப அரசுக்கு வலியுறுத்தல்
UPDATED : ஜூலை 11, 2025 12:00 AM
ADDED : ஜூலை 11, 2025 08:37 AM
சேலம்:
அன்புமணி ஆதரவு, பா.ம.க., மாநில மாணவர் சங்க தலைவர் விஜயராஜா தலைமையில் நிர்வாகிகள், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.
மனுவின் விவரம்:
தமிழகத்தில், 96 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் முதல்வர் பணியிடம் காலியாக உள்ளது. உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் முதலிடத்தில் இருப்பதாக பெருமை பேசும் தமிழக அரசு, 4 ஆண்டாக அரசு கல்லுாரிகளில் ஒரு உதவி பேராசிரியரை கூட நியமிக்கவில்லை. புதிதாக, 4,000 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர் என, ஆட்சிக்கு வந்த நாள்முதல், தி.மு.க., கூறி வருகிறது. ஆனால் நடவடிக்கை இல்லை.
கல்லுாரி பேராசிரியர்களின் பணிமூப்பு பட்டியல் தயார் நிலையில் இருப்பதால், அதன் அடிப்படையில் ஒரே நாளில் அனைத்து கல்லுாரிகளுக்கும் முதல்வரை நியமிக்க முடியும். முதல்வர் இல்லாமல், அரசு கல்லுாரிகள் சீரழிவதை, தி.மு.க., அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது. அதனால் அரசு கல்லுாரிகளில் முதல்வர், உதவி பேராசிரியர் என, 9,000க்கும் அதிகமான காலியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.