தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாலிடெக்னிக்குகளுக்கு தனி இயக்குனரகம் : ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

பாலிடெக்னிக்குகளுக்கு தனி இயக்குனரகம் : ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

பாலிடெக்னிக்குகளுக்கு தனி இயக்குனரகம் : ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு


UPDATED : மே 26, 2011 12:00 AM

ADDED : மே 26, 2011 10:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 26, 2011 12:00 AM ADDED : மே 26, 2011 10:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் அரசால் நடத்தப்படும் 30, அரசு உதவி பெறும் 34, சுயநிதியில் இயங்கும் 394 பாலிடெக்னிக்குகள் உள்ளன. 21 அரசு கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை. 130 துறைத் தலைவர் பணியிடங்களில் 10 பேர் மட்டும் உள்ளனர். 1200 ஆசிரியர் பணியிடங்களில் 400 பேர் உள்ளனர். பல ஆண்டுகளாக மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. புதிய கல்லூரிகள், துறைகள் துவக்கப்பட்டும் புதிய பணியிடங்கள் உருவாகப்படவில்லை. மாணவர்கள் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்து, ஷிப்ட் முறையில் வகுப்புகள் நடக்கின்றன. கற்பித்தல் பணிப்பளு மும்மடங்கு அதிகரித்துள்ளது.


தனி இயக்குனரகம்
தமிழகத்தில் 6 அரசு பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றின் நிர்வாகம் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தால் கவனிக்கப்படுகிறது. பாடத்திட்டம், தேர்வு உள்பட அனைத்தும் அண்ணா தொழில்நுட்ப பல்கலைகளால் நடத்தப்படுகின்றன. இருந்தாலும் இக்கல்லூரியின் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் பணியாற்ற வாய்ப்பளிக்கப்படுகிறது. ஆனால் இதே இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் அரசு பாலிடெக்னிக்குகளின் ஆசிரியர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. எனவே பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கென தனி இயக்குனரகம் உருவாக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.


அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் கணேசன், செயலாளர் சுப்புராஜ் கூறியதாவது: பாலிடெக்னிக்குகளின் பணிப்பளுவால் 433 பேர் பகுதிநேர ஆசிரியராக உள்ளனர். அவர்களுக்கு சம்பளம் குறைவு. தொகுப்பூதியத்தில் நியமித்து அடிப்படை சம்பளம் வழங்க வேண்டும். இருபது ஆண்டுகளில் 4 அரசாணைகளை முறையாக அமல்படுத்தவில்லை. ஏ.ஐ.சி.டி.இ.,படி சம்பளம் வழங்க உத்தரவிட்டும் முழுமையாக அமல்படுத்தவில்லை. ஆசிரியருக்கு பதவி மேம்பாடும் அளிக்கப்படவில்லை. புதிய அரசு இதற்கு தீர்வு காண வேண்டும், என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us