தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆளுமை திறன் மேம்பாட்டு பயிற்சியில் அசத்திய மாணவியர்

ஆளுமை திறன் மேம்பாட்டு பயிற்சியில் அசத்திய மாணவியர்

ஆளுமை திறன் மேம்பாட்டு பயிற்சியில் அசத்திய மாணவியர்


UPDATED : ஜூன் 01, 2011 12:00 AM

ADDED : ஜூன் 01, 2011 10:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 01, 2011 12:00 AM ADDED : ஜூன் 01, 2011 10:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளி மாணவர்களின் ஓவிய கண்காட்சி, கலை நிகழ்ச்சிகளோடு, ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் கோடை கால சிறப்பு வகுப்புகள் நேற்று நிறைவடைந்தன.


கோடை விடுமுறையையொட்டி, 4ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு, பாலமந்திர் எனும் ஆளுமை திறன் மேம்பாட்டு வகுப்புகள், மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தில் கடந்த ஒரு மாதம் நடந்தன.


இதில், நீதி போதனைகளுடன், யோகாசனம், சமஸ்கிருதம், ஓவியம் ஆகியவற்றிலும் மாணவர்களுக்கு பயிற்சி தரப்பட்டது. இப்பயிற்சி வகுப்புகள் நேற்றுடன் நிறைவடைந்தன. இதையொட்டி, பள்ளி மாணவர்களின் ஓவிய கண்காட்சி நடத்தப்பட்டது. இதில், கோபாலபுரம், டி.ஏ.வி.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கும் மாணவி நிவேதிதா வரைந்த, சிவபெருமான் ஓவியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், நிவேதிதா, தன் தோழிகள் சிருஷ்டி, சுருதி, சுருதிமோகன் ஆகியோருடன் சேர்ந்து வரைந்த பிளாஸ்டிக் பொருட்களால் உண்டாகும் தீமைகளை விளக்கும் ஓவியங்களும் கண்காட்சியில் இடம் பெற்றன.


இது குறித்து ஓவிய ஆசிரியர் லதா கூறும்போது, "மாணவியர் நான்கு பேரும் ஓவிய பயிற்சியில் ஆர்வமுடன் பங்கேற்றனர். பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில், தாங்கள் வரைந்த ராமகிருஷ்ணரின் ஓவியத்தை, காகித பைகளுடன் இணைத்து 20 பேருக்கு வழங்கினர்" என்றார்.


பள்ளி மாணவர்களின் ஆடல், பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் கவுதமானந்தர், ஒருங்கிணைப்பாளர் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us