UPDATED : ஜூன் 01, 2011 12:00 AM
ADDED : ஜூன் 01, 2011 10:54 AM
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் குண்டூர், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள கிராமப்புற மேம்பாட்டில் கவனம் செலுத்தி இயங்கி வரும் சைதன்யா கோதாவரி கிராமின் வங்கியில் 70 அலுவலக உதவியாளர்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதவிகளுக்கு அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., முன்னாள் ராணுவத்தினர் ஆகிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு உள்ளது.
வயது:
சைதன்யா கிராமின் வங்கியின் அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க 01.04.2011 அன்று 18 வயது நிரம்பியவராகவும் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தகுதிகள்:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆங்கில மொழி அறிவும், தெலுங்கு மொழியறிவும் கட்டாயம் தேவைப்படும். கம்ப்யூட்டர் திறன் பெற்றவர்களுக்கு முன்னுரிமை உள்ளது.
இதர விபரங்கள்:
சைதன்யா கிராமின் வங்கியின் அலுவலக உதவியாளர் பதவிக்கு ரூ.250/ கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினர் பிரிவினர் ரூ.50/ மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதுமானது. விண்ணப்பக் கட்டணத்தை ஆந்திரா வங்கியின் கிளையில் செலுத்தலாம். பரிந்துரைக்கப்பட்ட சலானின் மூலமாக மட்டுமே இந்தக் கட்டணத்தை செலுத்த வேண்டும். சலானில் பணம் செலுத்திய பின்னர் விண்ணப்பதாரருக்கான ரசீதில் சமீபத்திய புகைப்படத்தை ஒட்டி கையொப்பமிட வேண்டும்.
இந்த சலானை எழுத்துத் தேர்வின் போது எடுத்துச் செல்ல வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தில் சலுகையுடன் விண்ணப்பிப்பவர்கள்
உரிய ஆவணங்களை விண்ணப்பக் கட்டணம் செலுத்த செல்லும் போது எடுத்துச் செல்ல வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை செலுத்திய பின் இந்த வங்கியின் இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதால் முதலில் உங்களுக்கான உபயோகத்தில் உள்ள பிரத்யேகமான ஒரு இமெயில் முகவரி இருப்பதனை உறுதி செய்யவும். எழுத்துத் தேர்வு குண்டூர், எலூறு, ராஜமுந்திரி ஆகிய மையங்களில் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விபரங்களை இந்த வங்கியின் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
முக்கிய தேதிகள்
விண்ணப்பக் கட்டணம் செலுத்த, ஆன்லைனில் பதிவு நகல்கள் எடுக்க இறுதி நாள்: 15.06.2011
இணையதள முகவரி: http://www.chaitanyagodavarigrameenabank.in/recruitement.htm
