தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி ஆசிரியர்களுக்கும் இலவச புத்தகங்கள் வழங்க வேண்டும்

பள்ளி ஆசிரியர்களுக்கும் இலவச புத்தகங்கள் வழங்க வேண்டும்

பள்ளி ஆசிரியர்களுக்கும் இலவச புத்தகங்கள் வழங்க வேண்டும்


UPDATED : ஜூன் 10, 2011 12:00 AM

ADDED : ஜூன் 10, 2011 11:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 10, 2011 12:00 AM ADDED : ஜூன் 10, 2011 11:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளி ஆசிரியர்களுக்கும் இலவச புத்தகங்கள் வழங்க வேண்டும்


தமிழக அரசின் சார்பில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படுவது போல் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் கற்றுத்தரும் ஆர்வம் இருந்தும் கம்ப்யூட்டர் இல்லை என்பதால் மாணவர்களின் கற்கும் வாய்ப்பு பறிபோகும் நிலை இருப்பதால் வகுப்பிற்கு ஒரு கம்ப்யூட்டர் வழங்கவும் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.


படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது, கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படவில்லை என ஆசிரியர்கள் தரப்பில் ஆதங்கம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பாடப்புத்தகங்களை வைத்தே பாடம் நடத்தவும், அதற்கு முன்னதாக சுமார் 45 நிமிட பாட நேரத்தில் மாணவர்களுக்கு என்ன நடத்த வேண்டும், எவ்வாறு நடத்த வேண்டும், பாடக்கருத்துக்களை எளிதில் புரிய வைப்பது எவ்வாறு என்பது குறித்து பாடக்குறிப்புகள் எடுக்க வேண்டியுள்ளது.


மேலும் இதற்காக மாணவர்களது புத்தகங்களை இரவல் கேட்க வேண்டிய சூழ்நிலை இருப்பதுடன், மாணவர்களின் படிப்பு நேரமும் விரயமாகிறது என்கின்றனர். இதனால் ஆசிரியர்களின் மேஜைப்பணிக்கு பாடப்புத்தகங்கள் அவசியமாகிறது.


இதுதவிர தற்போது பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சிகள் வழங்குவதுடன், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழும் பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், தங்களது மாணவர்களுக்கும் அதை கற்றுத்தர ஆர்வமாக இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் கற்றுத்தர கம்ப்யூட்டர் வழங்காததால் பெற்ற பயிற்சியும் வீணடிக்கப்படுகிறது என்கின்றனர். தற்போது பள்ளிகளில் ஒருசில வகுப்புகளுக்கு மட்டுமே கம்ப்யூட்டர் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை விரிவுபடுத்தி வகுப்பிற்கு ஒரு கம்ப்யூட்டர் வழங்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு வழங்கப்படும் போது துவக்கப் பள்ளியிலேயே மாணவர்களது அடிப்படை கம்ப்யூட்டர் அறிவை வளர்க்க முடியுமென ஆர்வத்துடன் தெரிவிக்கின்றனர்.


மொத்தத்தில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்குவது போல், கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கும் புத்தகங்கள் வழங்க வேண்டுமென்றும், பயிற்சி பெற்று கற்றுத்தரும் ஆர்வம் இருந்தும் கம்ப்யூட்டர் இல்லாததால் மாணவர்களது கற்கும் வாய்ப்பு வீணாவதை தடுக்க வகுப்பிற்கு ஒரு கம்ப்யூட்டர் வழங்கவும், அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுசம்பந்தமாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தமிழக முதல்வர், சிறப்பு திட்டங்கள் மற்றும் செயலாக்கத்துறை அமைச்சர், பள்ளி கல்வித்துறை அமைச்சர், தமிழ்நாடு பாடநூல் நிறுவன இயக்குநர் ஆகியோருக்கு மனுச்செய்துள்ளனர். ஆகவே இக்கோரிக்கைகளை இந்த கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் வேண்டுமென எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us