UPDATED : ஆக 13, 2011 12:00 AM
ADDED : ஆக 13, 2011 12:40 PM
இது குறித்து சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் க. திருவாசகம் கூறுகையில், வேலைக்குச் செல்பவர்கள் பயன்பெறும் வகையில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் மீண்டும் மாலை நேரப் படிப்புகளை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கல்வியாண்டில் எம்.பி.ஏ., எம்.எஸ்சி. ஜியோமெட்ரிக்ஸ் ஆகிய 2 படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. செப்டம்பர் 15ம் தேதி முதல் இதற்கான வகுப்புகள் துவங்கும்.
மாலை நேரப் படிப்பைப் போல பகுதி நேர படிப்பும் அறிமுகமாகிறது. பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்களில் பணிபுரிவோர் பயன்பெறும் வகையில் ஊடகவியலில் முதுநிலை பட்டப்படிப்பு, பகுதி நேர படிப்பாக நடப்புக் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்படுகிறது.
இரண்டு ஆண்டு முதுநிலை படிப்பான இதில் சேரும் மாணவர்கள், ஆண்டுக்கு 30 நாட்கள் மட்டும் வகுப்புகள் நடத்தப்படும். 10 நாட்களுக்கு ஒரு பிரிவு வீதம் மூன்று பிரிவுகளாக வகுப்புகள் நடத்தப்படும். இந்த வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்க வேண்டியது கட்டாயம்.
ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் மட்டுமே இந்த மாலை நேர மற்றும் பகுதி நேர முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர முடியும் என்றார்.
