தமிழக இன்ஜியரிங் அட்மிஷன்: கிராமப்புற மாணவர்களே அதிகம்!
தமிழக இன்ஜியரிங் அட்மிஷன்: கிராமப்புற மாணவர்களே அதிகம்!
UPDATED : ஆக 31, 2009 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இந்த ஆண்டில் நகர்ப்புற மாணவர்களைவிட கிராமப்புற மாணவர்களே அதிக அளவில் இன்ஜியரிங் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டின் கீழ் இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களில் 64.5 சதவீதம் பேர் கிராமப்புறத்து மாணவர்கள். மீதமுள்ள 35.5 சதவீதம் பேரே நகரங்களைச் சேர்ந்தவர்கள்.
2005ம் ஆண்டில் 55 சதவீதம், 2006ம் ஆண்டில் 58 சதவீதம், 2007ம் ஆண்டி 60.8 சதவீத கிராமப்புற மாணவர்கள் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். நுழைவுத் தேர்வு ரத்து காரணமாக அதிக அளவிலான கிராமப்புற மாணவர்கள் இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில் சேர்ந்துள்ள மாணவர்களில் 43.5 சதவீதம் பேர் பிளஸ் டூ வகுப்பில் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2005ம் ஆண்டில் 26.34 சதவீதம், 2006ம் ஆண்டில் 27.86 சதவீதம், 2007ம் ஆண்டில் 35.63 சதவீத இடங்களில் தமிழ் வழி படித்த மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
ஆகஸ்ட் 30ம் தேதி நடைபெற்ற சிறப்பு கவுன்சிலிங்கில் இதுவரை பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்காத பொதுப்பிரிவு மாணவர்கள் 227 பேரும் தொழிற்க ல்வி மாணவர்கள் 194 பேரும் கலந்து கொண்டு கல்லூரிகளைத் தேர்வு செய்தனர். இத்துடன் இந்த ஆண்டுக்கான இன்ஜிரியரிங் கவுன்சிலிங் முடிவடைந்தது.
மொத்தமுள்ள 85 ஆயிரத்து 228 இடங்களில் 78 ஆயிரத்து 228 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. கவுன்சிலிங் முடிவில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 7268 இடங்கள் காலியாக உள்ளன என்று இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

