தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ கல்லூரி கூடுதல் பேராசிரியர் பதவி உயர்வு

மருத்துவ கல்லூரி கூடுதல் பேராசிரியர் பதவி உயர்வு

மருத்துவ கல்லூரி கூடுதல் பேராசிரியர் பதவி உயர்வு


UPDATED : செப் 12, 2011 12:00 AM

ADDED : செப் 12, 2011 10:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 12, 2011 12:00 AM ADDED : செப் 12, 2011 10:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மருத்துவ கல்லூரி இருதய அறுவை சிகிச்சை கூடுதல் பேராசிரியர் பதவி உயர்வு, ஐகோர்ட்டின் இறுதி தீர்ப்பை பொறுத்து அமையும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மதுரை மருத்துவ கல்லூரி இருதய அறுவை சிகிச்சை பிரிவு உதவி பேராசிரியர் மார்வின் மனோக் பெய்லிஸ் தாக்கல் செய்த மனு: மருத்துவ கல்லூரி பேராசிரியர், கூடுதல் பேராசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் கடந்த மாதம் நடந்தன. கூடுதல் பேராசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியிருந்ததால், அதில் கலந்து கொண்டேன். பயிற்சி காலத்தை முடிக்கவில்லை என கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.

பயிற்சி காலத்தை முடித்ததாக சுகாதார துறை இயக்குனர் உத்தரவை காட்டியும், அனுமதி மறுத்தனர். எனவே கூடுதல் பேராசிரியர் பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் சாமிதுரை, ஞானகுருநாதன் ஆஜராயினர்.

நீதிபதி எஸ்.மணிக்குமார், "இருதய அறுவை சிகிச்சை கூடுதல் பேராசிரியர் பதவி உயர்வு அனைத்தும், கோர்ட்டின் இறுதி தீர்ப்பை பொறுத்து அமையும்," என, இடைக்கால உத்தரவிட்டார். மனு குறித்து பதிலளிக்க சுகாதார துறை செயலாளர், மருத்துவ கல்வி இயக்குனர், மதுரை டீன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us