தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வங்கி உதவியாளர் பணித் தேர்வுக்கு இலவச பயிற்சி

வங்கி உதவியாளர் பணித் தேர்வுக்கு இலவச பயிற்சி

வங்கி உதவியாளர் பணித் தேர்வுக்கு இலவச பயிற்சி


UPDATED : செப் 21, 2011 12:00 AM

ADDED : செப் 21, 2011 11:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2011 12:00 AM ADDED : செப் 21, 2011 11:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சைதை துரைசாமியின் மனித நேய கல்வியகம், ஐஏஎஸ் போன்ற சிவில் சர்வீஸ் பணிகள் உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது.

அதுபோல, அகில இந்திய அளவில் வரும் நவம்பர் மாதம் 27ம் தேதி நடைபெறும் வங்கி உதவியாளர் பணிக்கான பொதுத் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு மனிதநேய கல்வியகம் சார்பில் இலவசமாக பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பயிற்சி புத்தகம், குறிப்புகள், கையேடுகள், செய்தித்தாள்கள், நூலக வசதி, இணையதள வசதி போன்ற பல்வேறு பயிற்சிகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 21ம் தேதி முதல் www.saidais.com என்ற இணையதளத்தின் வாயிலாகவும், மனிதநேய கல்வியக அலுவலகத்தில் நேரில் வந்தும் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us