தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சைனிக் பள்ளியில் சேர புதுச்சேரி மாணவர்களுக்கு அழைப்பு

சைனிக் பள்ளியில் சேர புதுச்சேரி மாணவர்களுக்கு அழைப்பு

சைனிக் பள்ளியில் சேர புதுச்சேரி மாணவர்களுக்கு அழைப்பு


UPDATED : அக் 21, 2011 12:00 AM

ADDED : அக் 21, 2011 11:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2011 12:00 AM ADDED : அக் 21, 2011 11:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து புதுவை பள்ளிக்கல்வி இயக்குனர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாடு திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம் அமராவதி நகரில் அமைந்துள்ள சைனிக் பள்ளியில் 2012-2013 கல்வி ஆண்டில் 6 மற்றும் 9-ம் வகுப்பில் மாணவர்களை (ஆண்கள் மட்டும்) சேர்ப்பதற்கான அகில இந்திய நுழைவுத்தேர்வு 8-1-2012 அன்று புதுச்சேரியில் உள்ள வீரமாமுனிவர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெறும்.

இதற்கான விண்ணப்பங்கள் வருகிற டிசம்பர் மாதம் 3-ந் தேதி வரை வழங்கப்படும். 6-ம் வகுப்பில் சேர 1-7-2013 அன்று 10 வயது முடிந்தும் 11 வயது முடியாமலும் அதாவது 2001 ஜுலை 2-ந் தேதியிலிருந்து 2002 ஜுலை 1-ந்தேதிக்குள் பிறந்த மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

9-ம் வகுப்பில் சேர 1-7-2012 அன்று 13 வயது முடிந்தும் 14 வயது முடியாமலும் அதாவது 1998 ஜுலை 2-ந் தேதியிலிருந்து 1999 ஜுலை 1-ந் தேதிக்குள் பிறந்து அரசு அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளியில் 8-ம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப படிவமும், விளக்க குறிப்பேடும் பெற விரும்பும் பொதுப்பிரிவினர் மற்றும் படைத்துறை பிரிவினர் ரூ.550-க்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர் ரூ.400-க்கும் அமராவதி நகர், பாரத ஸ்டேட் வங்கியில் (கிளை எண் 2191) மாற்றத்தக்க வகையில் முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதி நகர், என்ற பெயரில் டி.டி. எடுத்து அத்துடன் 25 ஜ் 20செ.மீ. சுய விலாசமிட்ட உறையில் எந்த வகுப்பிற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்பதையும் எந்த பிரிவினை சேர்ந்தவர் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

6-ம் வகுப்பில் சேர விரும்புபவர் நுழைவுத்தேர்வு எழுத விரும்பும் மொழியையும் குறிப்பிட்டு முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதி நகர், 642 102, உடுமலைப்பேட்டை வட்டம், திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவங்களை இணையதள முகவரியிலும் பெறலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 10-12-2011-க்குள் சென்று சேர வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு புதுச்சேரி அரசு கல்வி உதவித்தொகை வழங்கும். மேலும் விபரங்களுக்கு 04252-256246, 256296 என்ற சைனிக் பள்ளியின் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று செய்திக்குறிப்பில் பள்ளிக்கல்வி இயக்குனர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us