தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எஸ்.எஸ்.சி.,யில் சயின்டிபிக் அசிஸ்டன்ட் பணியிடங்கள்

எஸ்.எஸ்.சி.,யில் சயின்டிபிக் அசிஸ்டன்ட் பணியிடங்கள்

எஸ்.எஸ்.சி.,யில் சயின்டிபிக் அசிஸ்டன்ட் பணியிடங்கள்


UPDATED : அக் 21, 2011 12:00 AM

ADDED : அக் 21, 2011 12:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2011 12:00 AM ADDED : அக் 21, 2011 12:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய அரசுப் பணிக்கான காலி இடங்களுக்கான தேர்வுகளை நடத்தும் ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி.,யை நாம் நன்றாகவே அறிவோம்.

அரசுத் துறை சார்ந்த ஆராய்ச்சியுடன் தொடர்புடைய சயின்டிபிக் அசிஸ்டன்ட் காலியிடங்கள் 465ஐ நிரப்புவதற்காக இந்த அமைப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிகளுக்கு அரசு நிபந்தனைகளுக்கு ஏற்ப இட ஒதுக்கீடு உள்ளது.

தேவைகள்:
எஸ்.எஸ்.சி.,யின் சயின்டிபிக் அசிஸ்டன்ட் பதவிக்கு விண்ணப்பிக்க 28.10.2011 அன்று 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்பில் இயற்பியல் உள்ளிட்ட பிரிவு, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி,, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் அல்லது  எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலிகம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் ஆகியவற்றை முடித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ்டூ படிப்பை இயற்பியல், கணிதம் ஆகியவற்றுடன் கட்டாயம் படித்தவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதிக்கான படிப்பைக் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது எழுத்துத் தேர்வு சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நாட்டின் 9 மையங்களில் நடைபெறும்.

இதர விபரங்கள்:
எஸ்.எஸ்.சி.,யின் மேற்கண்ட காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஸ்டேட் வங்கிக் கிளையின் ஆன்லைன் அக்கவுண்ட் மூலமாக ரூ.100/ஐக் கட்டணமாக செலுத்த வேண்டும். இதன் பின்னர் இந்த விபரங்களுடன் ஆன்லைனில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களைப் பெற இணைய தளத்தைப் பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள்: 28.10.2011

இணையதள முகவரி: http://ssc.nic.in/whats%20new%20html/latest_news/IMD_Notice.pdf

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us