தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஓவியம் நடனத் தேர்வுகளுக்கு ஹால் டிக்கெட் விநியோகம்

ஓவியம் நடனத் தேர்வுகளுக்கு ஹால் டிக்கெட் விநியோகம்

ஓவியம் நடனத் தேர்வுகளுக்கு ஹால் டிக்கெட் விநியோகம்


UPDATED : நவ 16, 2011 12:00 AM

ADDED : நவ 16, 2011 11:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2011 12:00 AM ADDED : நவ 16, 2011 11:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ஓவியம், தையற்கலை, நடனம் மற்றும் இசைப் பாடங்களுக்கான தேர்வுகளுக்கு, வரும் 19ம் தேதி முதல் ஹால் டிக்கெட் வினியோகிக்கப்படும் என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

அரசு தேர்வுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு தேர்வுத்துறையால் நடத்தப்படும் ஓவியம், நடனம், தையற்கலை மற்றும் இசைப் பாடங்களுக்கான, தேர்வுகளுக்கு வரும் 19ம் தேதி முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. ஹால் டிக்கெட்களை, அந்தந்த மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

நடனம் - 21ம் தேதி, ஓவியப்பிரிவு- 22 முதல் 5ம் தேதி வரை, தையற்கலைப் பிரிவு- 7 முதல் 15ம் தேதி வரை, இசை- 8ம் தேதி ஆகிய நாட்களில், தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை பெற்றுக் கொள்ளலாம். நடனம் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், சென்னை, ராயபுரம் சி.எஸ்.ஐ., நார்த்விக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், தேர்வு மையம், தாராபுரம் எனக் குறிப்பிட்டு விண்ணப்பித்தவர்கள், ஈரோடு, காமராஜ் முனிசிபல் மேல்நிலைப் பள்ளியிலும், கும்பகோணம் எனக் குறிப்பிட்டு விண்ணப்பித்தவர்கள், தஞ்சாவூரில் உள்ள ஆக்ஸிலியம் மேல்நிலைப் பள்ளியிலும் ஹால் டிக்கெட்களை பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us