நான்கு மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்களைக் கொண்ட பள்ளி
நான்கு மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்களைக் கொண்ட பள்ளி
UPDATED : ஜன 29, 2012 12:00 AM
ADDED : ஜன 29, 2012 11:49 AM
மஞ்சூர்: நீலகிரி மஞ்சூர் மட்டக்கண்டி அரசு ஆரம்ப பள்ளியில், நான்கு மாணவர்களுக்கு, இரு ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.
நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே மட்டக்கண்டி அரசு ஆரம்ப பள்ளி உள்ளது. கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய இப்பள்ளியில், நான்கு மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். அவர்களுக்கு கற்பிக்க, இரு ஆசிரியர்கள் உள்ளனர். மட்டக்கண்டி கிராமம் மற்றும் அதனருகே உள்ள கிராம மக்கள், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதால், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.
40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நடைமுறை தற்போது உள்ளது. ஆனால், இப்பள்ளியில் நான்கு மாணவர்களுக்கு இரு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல், பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டடம், சுற்றுச்சுவர், கழிவறை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி என்ன பயன் என்று, அரசு அதிகாரிகள் சிந்திக்க வேண்டும்.
