தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அழகப்பா பல்கலையில் ஏழு புதிய பாடப்பிரிவுகள்: துணைவேந்தர்

அழகப்பா பல்கலையில் ஏழு புதிய பாடப்பிரிவுகள்: துணைவேந்தர்

அழகப்பா பல்கலையில் ஏழு புதிய பாடப்பிரிவுகள்: துணைவேந்தர்


UPDATED : அக் 09, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


காரைக்குடி:
அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி மையம் மூலம் ஏழு புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்படும் என துணைவேந்தர் பி.ராமசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: அழகப்பா பல்கலை தொலைநிலைக்கல்வி மையத்தில் எம்.ஏ.,(மனிதவள ஆளுமை), எம்.எஸ்சி., வேதியியல், இயற்பியல், தாவரவியல், எம்.ஏ., நூலக தானியங்கி மற்றும் இணையம், நூலக தகவல் அறிவியல் சான்றிதழ் படிப்பு, எம்.பி.ஏ., மனிதவள மேலாண்மை ஏழு புதிய படிப்புகள் துவக்கப்படும். விலங்குகள் நலன் குறித்த பாடப்பிரிவு துவக்க சிண்டிகேட் ஒப்புதல் தந்தது.
கடல்சார் நுண்ணுயிர் தொழில்நுட்ப மையம், கடல்சார் மருந்தியல் மையம், கடல்சார் புவி அமைப்பியல் மையம் புதிதாக துவக்கப்படும். எம்.எஸ்சி.,யில் கடல்சார் நுண்ணுயிர் தொழில் நுட்பவியல், கடல்சார் மருந்தியல், புவி அமைப்பியல் பாடப்பிரிவு துவக்கப்படும்.
முனைவர் பட்ட ஆய்வை மதிப்பீடு செய்ய ஆய்வு சுருக்கம் சமர்ப்பிக்கும் போது பிற பல்கலையில் பணியாற்றும் நான்கு வல்லுநர்கள் பெயர் பட்டியல் சமர்பிக்க வேண்டும். அந்த வல்லுநர்களை தொடர்பு கொள்ள டெலிபோன் எண், இ-மெயில் முகவரி, பேக்ஸ் எண்களையும் ஆய்வு நெறியாளர் சமர்பிக்க வேண்டும். இதன்மூலம் முனைவர் பட்ட ஆய்வு மதிப்பீட்டிற்கான காலதாமதம் தவிர்க்கப்படும்.
புதிய கட்டடம்: பல்கலையில் ஒரு கோடியே 11 லட்சம் ரூபாயில் ராமானுஜர் உயர்கணித துறைக்கு கட்டடம் கட்டப்படுகிறது. இத்துறைக்கு இயக்குனர், பேராசிரியர் உட்பட 14 ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும். தொலைநிலைக்கல்வி மையம் மூலம் மாணவர்களுக்கு இ-லேர்னிங் வழியில் கல்வி கற்பித்தலை அறிமுகம் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us