கல்வி உதவித்தொகை கேட்டு மாணவ, மாணவியர் போராட்டம்
கல்வி உதவித்தொகை கேட்டு மாணவ, மாணவியர் போராட்டம்
UPDATED : அக் 14, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
நாகர்கோவில்: சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை அனைவருக்கும் வழங்கக்கோரி குமரி மாவட்டத்தில் போராட்டம் நடந்தது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் சிறுபான்மை மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசு மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதை அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக குமரி மாவட்டத்தில் பல்வேறு கட்ட போராட்டமும் நடைபெற்றது.
மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளையில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.
