தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒரே நாளில் தேசிய, மாநில ‘ஸ்காலர்ஷிப்’ தேர்வு

ஒரே நாளில் தேசிய, மாநில ‘ஸ்காலர்ஷிப்’ தேர்வு

ஒரே நாளில் தேசிய, மாநில ‘ஸ்காலர்ஷிப்’ தேர்வு


UPDATED : அக் 14, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சேலம்:
அரசு உதவித்தொகை பெறுவதற்கான தேசிய மற்றும் மாநில திறனாய்வுத்தேர்வு ஒரே நாளில், ஒரே நேரத்தில் நடக்கிறது.
இந்தியா முழுவதும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளில் சிறந்தவர்களை தேர்வு செய்து, அவர்களது கல்லூரிப் படிப்பு மற்றும் பிஎச்.டி., படிப்பு வரை கல்வி உதவித்தொகையை (ஸ்காலர்ஷிப்) மத்திய அரசின், ‘தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பயிற்சிக் கழகம்’ ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
அதன்படி, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக, தமிழகத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு நவ., 10ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை முதல்கட்ட திறனாய்வுத் தேர்வு நடக்கிறது.
தமிழக அரசின் தேர்வுத்துறை மூலம் நடக்கும் இத்தேர்வில் பங்கேற்க, மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் 50 ரூபாய் தேர்வுக் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்துள்ளனர். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் தேசிய அளவிலான திறனாய்வுத் தேர்வுக்குத் தகுதி பெறுவர்.
தேசிய திறனாய்வுத் தேர்வு போலவே, தமிழக அரசின் தேர்வுத்துறை மூலம், மாநில அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஆண்டுதோறும் திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வும் நவ., 10ம் தேதி மாநிலம் முழுவதும் நடக்கிறது.
மாநில அளவிலான திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு மாதம் 500 ரூபாய் வீதம், ஆண்டுக்கு, 6,000 ரூபாய் கல்வி உதவித்தொகையாக பிளஸ் 2 வரை பெறுவர். இந்த கல்வி உதவித்தொகை தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இதற்கு, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் 50 ரூபாய் தேர்வுக்கட்டணம் செலுத்தி விண்ணப்பித்துள்ளனர்.
மத்திய அரசின் தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தமிழக அரசின் தேர்வுத்துறை மூலம் மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்காக நடத்தப்படும் இருதேர்வுகளும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் (நவ., 10ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை) நடக்கிறது என்பதால், இந்த இரண்டு தேர்வுகளில் ஏதாவது ஒரு தேர்வை மட்டும் எழுத வேண்டிய சூழ்நிலைக்கு எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் தள்ளப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us