தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கட்டடம் திறப்பு விழாவில் மாணவிகளுக்கு ஸ்டாலின் அறிவுரை

கட்டடம் திறப்பு விழாவில் மாணவிகளுக்கு ஸ்டாலின் அறிவுரை

கட்டடம் திறப்பு விழாவில் மாணவிகளுக்கு ஸ்டாலின் அறிவுரை


UPDATED : அக் 25, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி, 30 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது.
இக்கல்லூரியில் தமிழக அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 15 வகுப்பறைகள் மற்றும் மொழி பெயர்ப்பு ஆய்வுக் கூடங்கள் கட்டப்பட்டன.
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், புதிய கட்டடங்களை திறந்து வைத்தும், விடுதி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டியும் பேசியதாவது: கல்வித் துறைக்கு தமிழக அரசு பல்வேறு வசதிகள் செய்து வருகிறது. இதை நீங்கள் முறையாகப் பயன்படுத்தி, பல பட்டங்களைப் பெற வேண்டும். இந்தக் கல்லூரியில் புதியதாக கட்டப்பட்ட கட்டடத்திற்கு அண்ணாதுரையின் பெயர் சூட்டப்படுகிறது.
கடந்த 34  ஆண்டுகளாக செயல்பட்டு வரும்  இந்தக் கல்லூரியில், 12 இளநிலைப் படிப்புகளும், ஆறு முதுநிலைப் படிப்புகளும், மூன்று முனைவர் படிப்புகளும் கற்றுத் வழங்கப்படுகிறது.
குடியரசு தின விழா அணிவகுப்பு மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளில் சில ஆண்டுகளாக இந்தக் கல்லூரி முதல் இடத்தை பிடித்துள்ளது. இங்கிருந்து பல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உருவாகியுள்ளனர். ஒரு பெண் படித்தால் அந்தக் குடும்பமே படித்ததற்கு சமம். பட்டம் பெறும் மாணவிகளாகிய நீங்கள், சமுதாயத்திற்குப் பயன் படும் அளவில் திகழ வேண்டும்.
இந்தியர்கள் வெளிநாட்டில் சென்று படிக்கும் காலம் மாறி, வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்கு வந்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டைக் காப்பாற்றும் பொறுப்பை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
விழாவிற்கு, அமைச்சர் பொன்முடி தலைமை வகித்தார். உயர்கல்வி முதன்மைச் செயலர் கணேசன், கல்லூரிக் கல்வி இயக்குனர் நளினி ரவீந்திரன், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் பாப்பா சங்கர் வரவேற்றார். வரலாற்றுத் துறை பேராசிரியை தெய்வானை நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us