கல்லூரிகளில் ஓய்வு பெற்ற பேராசிரியர்களை நீக்க உத்தரவு
கல்லூரிகளில் ஓய்வு பெற்ற பேராசிரியர்களை நீக்க உத்தரவு
UPDATED : அக் 31, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
தமிழகத்தில் உள்ள 67 அரசு கல்லூரிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களில், ஓய்வு பெற்ற பேராசிரியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதன்படி, கல்லூரிகளில் தலா ஐந்து பேர் வீதம், கடந்த ஜூலை மாதத்தில் நியமிக்கப்பட்டனர்.
நான்கு மாதங்கள் மட்டுமே பணியாற்றிய இவர்களை நீக்குமாறு, கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலான கல்லூரிகளில் அக்., 12ம் தேதி முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
