தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெளிநாடுகளுடன் ஒப்பந்தமிட இந்திய கல்வி நிறுவனங்கள் கோரிக்கை!

வெளிநாடுகளுடன் ஒப்பந்தமிட இந்திய கல்வி நிறுவனங்கள் கோரிக்கை!

வெளிநாடுகளுடன் ஒப்பந்தமிட இந்திய கல்வி நிறுவனங்கள் கோரிக்கை!


UPDATED : நவ 04, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில் உள்ள தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களை பொறுத்தவரை, எந்த ஒரு வெளிநாட்டு கல்வி நிறுவனத்திடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இந்த விதிமுறை கடந்த 2004ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.
இதன்மூலம், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள மாநில, மத்திய அரசுகளின் அனுமதியோ, பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதியோ பெற வேண்டிய அவசியமில்லை.
இந்நிலையில், தொழில்நுட்ப கல்வி வழங்குவதில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முன் அனுமதி பெற வேண்டும் என அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு (ஏ.ஐ.சி.டி.இ.,) 2005ம் ஆண்டு விதிமுறையை மாற்றி அமைத்தது.
இதனால், தொழில்நுட்ப கல்வி வழங்குவதில் வெளிநாட்டு பல்கலையுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள 56 இந்திய கல்வி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த கோரிக்கையை தற்போது மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதுவரை ஆறு இந்திய கல்வி நிறுவனங்கள் மட்டுமே ஏ.ஐ.சி.டி.இ.,யின் அனுமதியுடன் ஆறு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தமிட்டு, தொழில்நுட்ப கல்வி வழங்கி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us