தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.டி.எஸ்., மாணவர்களுக்கு தனி தேர்வு நடத்த கோரிக்கை

பி.டி.எஸ்., மாணவர்களுக்கு தனி தேர்வு நடத்த கோரிக்கை

பி.டி.எஸ்., மாணவர்களுக்கு தனி தேர்வு நடத்த கோரிக்கை


UPDATED : பிப் 26, 2013 12:00 AM

ADDED : பிப் 26, 2013 07:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 26, 2013 12:00 AM ADDED : பிப் 26, 2013 07:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து, தமிழ்நாடு பல் மருத்துவ மாணவர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் அருளப்பராஜ் கூறியதாவது: இம்மாதம், 1ம் தேதி முதல், பி.டி.எஸ்., பட்டப்படிப்பு மாணவர்களுக்கு, ஆண்டு தேர்வுகள் நடந்து வருகின்றன. இத்தேர்வில் பங்கேற்க, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின் கீழ் இயங்கும், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், 10 கல்லூரிகளைச் சேர்ந்த, 92 மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இவர்களில், 40 பேர், பி.டி.எஸ்., இறுதியாண்டு மாணவர்கள். தேர்வு எழுத போதுமான வருகைப் பதிவேடு உள்ளிட்ட தகுதிகள் இருந்தும், 92 மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படாதது குறித்து, கூட்டமைப்பின் சார்பில், முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளித்தோம். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறையிட்டோம்.இதுவரை, இம்மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை.

இம்மாதம், 28ம் தேதியுடன், தேர்வுகள் முடிவடைகின்றன. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இம்மாணவர்களுக்கு தனித் தேர்வு நடத்த, தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அருளப்பராஜ் கூறினார்.

குறிப்பிட்ட மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படாததற்கு, உரிய காரணங்கள் இருக்கும் என, மருத்துவப் பல்கலை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us