தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சர் தியாகராயா கல்லூரியில் வரலாற்றியல் மன்ற விழா!

சர் தியாகராயா கல்லூரியில் வரலாற்றியல் மன்ற விழா!

சர் தியாகராயா கல்லூரியில் வரலாற்றியல் மன்ற விழா!


UPDATED : பிப் 27, 2013 12:00 AM

ADDED : பிப் 27, 2013 05:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 27, 2013 12:00 AM ADDED : பிப் 27, 2013 05:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: வண்ணாரப்பேட்டையிலுள்ள சர் தியாகராயா கல்லூரியின் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி வரலாற்றியல் துறையின் சார்பாக, "வரலாற்றியல் மன்ற" நிறைவு விழா பிப்ரவரி 27ம் தேதி சிறப்பாக நடத்தப்பெற்றது.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக, சென்னை குரோம்பேட்டையிலுள்ள SDNB மகளிர் கல்லூரியின் வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் S.கீதா கண்ணம்மாள் கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினர் உள்ளிட்ட, விழாவில் கலந்துகொண்ட அனைவரையும், சர் தியாகராயா கல்லூரியின் வரலாற்றியல் துறை தலைவர் முனைவர் S.N.நாகேஸ்வர ராவ், வரவேற்று உரையாற்றினார்.

"வட்டார வரலாற்று வரைவியல் - ஒரு கண்ணோட்டம்" என்ற தலைப்பில், சிறப்பு விருந்தினர், கருத்துரையாற்றினார். அப்போது அவர், வட்டார வரலாற்று வளர்ச்சிக்கு கால்டுவெல் பாதிரியார் ஆற்றிய தொண்டு குறித்தும், நமது சமூகம் மற்றும் வட்டாரப் பகுதிகளின் வரலாற்றை வெளிக்கொணர வேண்டியதன் அவசியம் குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தார்.

இவ்விழாவில், வரலாற்றுத்துறை பேராசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர். இறுதியில், நன்றியுரை மற்றும் நாட்டுப்பண் இசைப்புடன், விழா நிறைவுபெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us