தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆமை வேகத்தில் கல்லூரி சாலை மேம்பாட்டு பணி

ஆமை வேகத்தில் கல்லூரி சாலை மேம்பாட்டு பணி

ஆமை வேகத்தில் கல்லூரி சாலை மேம்பாட்டு பணி


UPDATED : மார் 11, 2013 12:00 AM

ADDED : மார் 11, 2013 10:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 11, 2013 12:00 AM ADDED : மார் 11, 2013 10:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியலூர்: அரியலூர் இருசு குட்டை பகுதியிலிருந்து, அரசு கலைக்கல்லூரி வரையிலான, 700 மீட்டர் தூரமுள்ள, ராஜாஜிநகர் கல்லூரி சாலையை சீரமைத்து, தார்ச்சாலை அமைக்கும் பணி கடந்த, ஒரு மாதத்துக்கு முன் துவங்கியது. பொக்லைன் மூலம் கொத்தி கிளறி விடப்பட்ட அந்த சாலையில், எந்தவித மேம்பாட்டு பணியும் செய்யப்படவில்லை.

உடனுக்குடன் சாலை பணிகளை செயல்படுத்தகூடிய, நவீன வசதிகளை கொண்ட பல காண்ட்ராக்டர்கள் உள்ள இன்றைய காலகட்டத்தில், ஒரு மாதத்துக்கு முன்பு கொத்தி போடப்பட்டு கிடக்கும், மேற்கண்ட அரியலூர் அரசு கலைக்கல்லூரி சாலையில், கிராவல் கொட்டும் பணி கடந்த, இரண்டு நாட்களுக்கு முன் துவங்கியுள்ளது. அதுவும் ஆமை வேகத்தில் தான் நடக்கிறது.

இதே நிலையில் மேற்கண்ட சாலை பணி நடந்தால், அந்த சாலை முழுமையாக செப்பனிட, மூன்று மாதத்துக்கு குறையாமல் ஆகும் என தெரிய வருகிறது. இதனால் நாள்தோறும் அந்த சாலையை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், டூவீலர், ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பலரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.

எனவே, அரியலூர் நகராட்சி நிர்வாகத்தினர், இதில் கூடுதல் கவனம் செலுத்தி, ஆமை வேகத்தில் நடக்கும், அரியலூர் அரசு கலைக்கல்லூரி சாலை மேம்பாட்டுப்பணியை, விரைந்து செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அனைத்து தரப்பு மக்களும் விரும்புகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us