தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வாறுகால்களில் ஓட்டல் கழிவுகள்: மாணவர்கள், பொதுமக்கள் அவதி

வாறுகால்களில் ஓட்டல் கழிவுகள்: மாணவர்கள், பொதுமக்கள் அவதி

வாறுகால்களில் ஓட்டல் கழிவுகள்: மாணவர்கள், பொதுமக்கள் அவதி


UPDATED : மார் 11, 2013 12:00 AM

ADDED : மார் 11, 2013 11:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 11, 2013 12:00 AM ADDED : மார் 11, 2013 11:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் உள்ள வாறுகால்களில், ஓட்டல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் துர்நாற்றத்தில், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

அருப்புக்கோட்டை மதுரை ரோட்டின் ஒரு புறம் மெயின் வாறுகால்கள் உள்ளது. அதன் வழியாக மழை நீர் சென்று, புளியம்பட்டி பகுதி செவல் கண்மாயில் சேரும்படி அமைக்கப்பட்டிருந்தது. வாறுகால்களை நகராட்சியினர் முறையாக பராமரிப்பு செய்யாததாலும், அப்பகுதி ஓட்டல்கள் கழிவு, பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் வாறுகால் அடைபட்டு, கழிவு நீர் வெளியேற முடியாமல் உள்ளது. தாங்க முடியாத துர்நாற்றமும் ஏற்படுகிறது. அப்பகுதி துவக்க மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

மேலும் மதுரை ரோடு மேம்பாலத்திலிருந்து புதிய பஸ் ஸ்டாண்ட் வரை உள்ள இந்த வாறுகாலில், கழிவு நீர் தேங்கி உள்ளது. நகராட்சி சுகாதார பிரிவினர் கண்டு கொள்ளாமல் உள்ளனர் . கவுன்சிலர் சிக்கந்தர், "வாறுகாலை தூர் வாரி, அகலப்படுத்த, கடந்த இரு ஆண்டுகளாக கூறி வருகிறேன். எவ்வித நடவடிக்கையும் இல்லை. வாறுகாலின் மூன்று இடங்களில் அமைந்துள்ள பாலங்கள் தாழ்வாக இருப்பதால், மண் மற்றும் குப்பை அடைத்து கழிவு நீர் வெளியேற முடியாத நிலை உள்ளது. பாலங்களை உயர்த்தி கட்ட வலியுறுத்தியுள்ளேன்" என்றார்.

நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம், "பாலம் மற்றும் வாறுகாலை அகல படுத்த நிதி ஒதுக்கி, வேலைகள் செய்ய நடவடிக்கையில் உள்ளது. விரைவில் பணிகள் துவங்கும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us