தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் செய்தி எதிரொலி: தமிழ் வளர்ச்சித்துறை விளக்கம்

தினமலர் செய்தி எதிரொலி: தமிழ் வளர்ச்சித்துறை விளக்கம்

தினமலர் செய்தி எதிரொலி: தமிழ் வளர்ச்சித்துறை விளக்கம்


UPDATED : மார் 13, 2013 12:00 AM

ADDED : மார் 13, 2013 07:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 13, 2013 12:00 AM ADDED : மார் 13, 2013 07:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சமீபத்தில், "தினமலர்&' நாளிதழில் வெளியான, "தமிழ் வளர்ச்சித் துறை திட்டங்கள் மந்தம்" என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, தமிழ் வளர்ச்சித் துறை, நடந்த பணிகள் குறித்து விளக்க அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

திருக்குறள், சீன அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, வெளியிடுவதற்கு தயார் நிலையில் உள்ளது. பாரதி, பாரதிதாசன் பாடல்களை அரபு மொழியில் மொழிபெயர்ப்பு நடந்து வருகிறது. இதற்கான பாடல்களை தெரிவு செய்யும் பணி, கடந்த ஆண்டே முடிந்தது.

அதேபோல், பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் சீன மொழியில் மொழி பெயர்க்கும் பணி, ஐந்தாண்டு திட்டப் பணி என்ற போதிலும், 50 சதவீத பணிகள் முடிந்துள்ளன. தமிழ் வளர்ச்சித் துறை இணையதளத்தில், சொல் வங்கித் திட்டத்தில் தரப்பட்டுள்ள, ஆங்கிலத்திற்கு இணையான தமிழ்ச்சொற்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கிடைக்கப் பெறாத, வெளிநாட்டு நூலகங்களில் அரிய தமிழ் நூல்கள் 50, இதுவரை டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. பிறநாட்டு மொழியியல் அறிஞர்களால், தமிழ் மொழியின் பெருமை குறித்து எழுதப்பட்ட கருத்துக்கள், 70 சதவீதம் தொகுக்கப்பட்டுள்ளன.

தமிழ் பொன்மொழிக் களஞ்சியம், அறநெறிக் கருவூலம் வெளியீடு திட்டத்தின் படி, தொகுக்கும் பணி, 90 சதவீதம் முடிந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில், கூறப்பட்டிருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us