தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் செய்தி எதிரொலி: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

தினமலர் செய்தி எதிரொலி: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

தினமலர் செய்தி எதிரொலி: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு


UPDATED : மார் 14, 2013 12:00 AM

ADDED : மார் 14, 2013 08:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 14, 2013 12:00 AM ADDED : மார் 14, 2013 08:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தினமலர் செய்தி எதிரொலியாக, 10ம் வகுப்பு மாணவர்களின் வருகைப் பதிவு விவரங்களை அனுப்பி வைக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு அடிப்படையில், பள்ளியின் தரம் நிர்ணயிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, தனியார் பள்ளிகள் அதிக மதிப்பெண்களுடன்,100 சதவீதம் தேர்ச்சி பெற்றால், மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும்.

அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்தால், முதன்மை கல்வி அலுவலர், கலெக்டர் நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும். நூறு சதவீத தேர்ச்சி காட்டுவதற்காக, சரியாக படிக்காத, 10ம் வகுப்பு மாணவர்களை, தலைமை ஆசிரியர்கள் தேர்வு எழுத தடை விதிக்கின்றனர்.

முதல் கட்டமாக, மாணவர்களுக்கு நடந்த செய்முறை தேர்வில், 10 சதவீதம் மாணவர்கள், "ஆப்சென்ட்&' ஆகியுள்ளனர். இது குறித்து, "தேறாத மாணவர்கள், ஆப்சென்ட் ஆக்கும் திட்டம்" என, மார்ச் 7, தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இதன் எதிரொலியாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வருகைப் பதிவு, தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளாரா, இல்லை என்றால் அதற்கான காரணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இம்மாதம், 27ம் தேதி, 10ம் வகுப்பு தேர்வு துவங்க உள்ள நிலையில், இந்த உத்தரவால், ஆப்சென்ட் மாணவர்களின் எண்ணிக்கை குறையும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us