தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பேருந்தின் கூரை மீது மாணவர்கள் ஆபத்தான பயணம்

பேருந்தின் கூரை மீது மாணவர்கள் ஆபத்தான பயணம்

பேருந்தின் கூரை மீது மாணவர்கள் ஆபத்தான பயணம்


UPDATED : மார் 18, 2013 12:00 AM

ADDED : மார் 18, 2013 10:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 18, 2013 12:00 AM ADDED : மார் 18, 2013 10:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.கே.பேட்டை: பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை இடையே குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கப்படுவதால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பேருந்து கூரை மீது அமர்ந்து பயணிக்கின்றனர். இந்த மார்க்கத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பள்ளிப்பட்டு வட்டத்தில், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய ஒன்றியங்கள் அமைந்து உள்ளன. பள்ளிப்பட்டில் வட்டாட்சியர் அலுவலகம், வனச்சரக அலுவலகம், கருவூலம், நிலவள வங்கி உள்ளிட்ட அலுவலகங்கள் அமைந்து உள்ளன. இந்த அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் என, தினசரி, 2,000 பேர் பள்ளிப்பட்டு வந்து செல்கின்றனர்.

பள்ளிப்பட்டு, ஆந்திர மாநில எல்லையில் அமைந்து உள்ளதால், இங்குள்ள மாணவர்கள், தங்களின் கல்லூரி படிப்பை, திருத்தணி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்கின்றனர். இந்த மார்க்கத்தில், குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக, காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளில் அதிக நெரிசல் நிலவுகிறது.

குறித்த நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதால், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் சிரமத்துடன் பயணிக்கின்றனர். சிலர், பேருந்தின் கூரை மீது அமர்ந்து, ஆபத்தான வகையில் பயணம் மேற்கொள்கின்றனர்.
நெரிசலை தவிர்க்கும் விதமாக, இந்த மார்க்கத்தில், கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பொதுமக்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும். விரைவில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us