தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச புத்தகங்களை திரும்பப்பெறும் ஆசிரியர்கள்: மாணவர்கள் குழப்பம்

இலவச புத்தகங்களை திரும்பப்பெறும் ஆசிரியர்கள்: மாணவர்கள் குழப்பம்

இலவச புத்தகங்களை திரும்பப்பெறும் ஆசிரியர்கள்: மாணவர்கள் குழப்பம்


UPDATED : மார் 25, 2013 12:00 AM

ADDED : மார் 25, 2013 10:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 25, 2013 12:00 AM ADDED : மார் 25, 2013 10:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு அரசு இலவசமாக வழங்கும் புத்தகங்களை ஆசிரியர்கள் திரும்பப் பெறுவதால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 2012-13ம் ஆண்டு முதல் முப்பருவ சமச்சீர் கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.  மூன்று பருவத்தில் தமிழ் மற்றும் ஆங்கில பாடங்கள் ஒரு புத்தகத்திலும், அறிவியல், சமூக  அறிவியல் மற்றும் கணித பாடங்கள் மற்றொரு புத்தகத்திலும் உள்ளன. ஒரு பருவத்தின் தேர்வு முடிந்த பிறகு, அடுத்த பருவ புத்தகங்கள் மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் சில பள்ளிகளில் ஒரு பருவம் முடிந்து அடுத்த பருவத்துக்கு புத்தகங்கள் வினியோகிக்கும் போது முந்தைய பருவ புத்தகங்கள் மாணவர்களிடம் இருந்து திரும்ப பெறப்படுகிறது. மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை தீர்க்க முடியாத நிலையுள்ளது. இதனால், மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

மாணவர்கள் சிலர் கூறியதாவது: ஒவ்வொரு முறையும் காலாண்டு, அரையாண்டு தேர்வு முடியும் போதும் முந்தைய பருவ புத்தகங்களை ஆசிரியர்கள் கொண்டு வருவார்கள். இப்பருவ புத்தகங்களை திரும்பி வழங்கினால் மட்டுமே அடுத்த பருவ புத்தகங்களை கையில் தருவார்கள். சில ஆசிரியர்கள் இப்புத்தகங்களை எடைக்கும் போடுகின்றனர், என்றனர்.

கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறியதாவது:
சில பள்ளிகளில் மாணவர்களிடம் இருந்து புத்தகங்கள் பெறப்பட்டு இடைநின்ற மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் படிக்க வழங்கப்படுகிறது. எனினும் இது போன்ற செயல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை. இது போன்ற பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us